Monday, August 9, 2010

வாதாபி கலை மடல்

ஓவியர் மணியம் அவர்கள் ஒரு முறை கன்னட நாட்டிலுள்ள பாதாமி என்ற இடத்திற்கு சென்று அங்கிருந்த சிற்பங்களை ரசித்து வியந்து ஊள்ளார். மன்னர்கள் காலத்தில் இச்சிற்பங்கள் எப்படி வடிக்கப்பட்டு இருந்திருக்கும் என்ற கற்பனையை ஓவியமாக தீட்டி அன்றைய கல்கி இதழில் வெளியிட்டுள்ளார். இவ்வோவியங்களுக்கு அவர் வைத்திட்ட பெயர் 'வாதாபி மடல்'

இதே ஓவியங்களின் மறுபதிப்பை ஒரு பழைய மாத இதழில் (ஓம் சக்தி) பார்க்க நேரிட்டது. அவற்றின் ஸ்கேன்கள் அப்படியே இங்கே....







5 comments:

King Viswa said...

மிகவும் அருமையான ஒரு ஓவியர் மணியம் அவர்கள்.

இந்த புத்தகமும், மற்ற பிற சிறப்பு இதழ்களும் கூட என்னிடம் (சாரி, எங்கள் வீட்டில்) இருக்கிறது. இதுபோன்ற புத்தகங்களை வாங்குவது எங்கள் வீட்டிலுள்ளோர். நான் சில வேளைகளில் இது போன்ற சிறப்பு இதழ்களை புரட்டி பார்ப்பதோடு சரி.

முன்பொரு நாளில் ஒரு சிறப்பு இதழை பார்த்தேன். அதில் இது போன்ற சிறப்பு வாய்ந்த இடங்களுக்கு பிரபல ஓவியர்களை நேரில் அழைத்து சென்று அவர்களை அந்த புராதான சிறபங்களை ஓவியமாக வரைய வைத்தனர். அதுகூட ஒரு தீபாவளி மலரிலோ அல்லது விடுமுறை மலரிலோ வந்தது. தற்போதுதான் புத்தகங்களில் படிப்பதற்கு பல பக்கங்கள் இருந்தாலும் ஓவியங்கள் குறைவே.

கனவுகளின் காதலன் said...

நண்பரே,

சிறப்பான பகிர்விற்கு நன்றி.

Sweatha Sanjana said...

மலைவாசி பெண்ணை நிர்வாணமாக்கிய கொடூரங்கள் ! www.jeejix.com ஜீஜிக்ஸ்

Rafiq Raja said...

ஓவியங்களில் உயிரோட்டம் அருமையாக இழையோடுகிறது. ஓவியர் மணியம் பற்றி மேலும் அறிந்து கொள்ள ஆர்வத்தை தூண்டும, சித்திரங்கள்.

பகிர்வுக்கு நன்றி, சிவ்.

Mr. J said...

எங்கள் வீட்டில் மணியம் வரைந்த சித்திரங்களுடன் பொன்னியின் செல்வன் கதை உள்ளது. எத்தனை சிறப்பான ஓவியர் அவர். அருமையான பதிவு நண்பரே.