Monday, June 8, 2015

பகுத்தறிவு பேசும் வேற்றுகிரக வாசி "ஈமோ"

வணக்கம்  நண்பர்களே ,
தந்தை பெரியாரின்  மீது எனக்கு எப்போதும் ஒரு மரியாதையும் ஈர்ப்பும் உண்டு. தந்தை பெரியாரின் கொள்கைகளை தாங்கி, திராவிடர் கழகத்தின் சார்பாக வெளிவரும் நாளிதழ் "விடுதலை" ஆகும். அதில் வெளிவரும் ஒரு தின தொடர்கதையே (daily strip) "ஈமோ".

ஈமோ என்பது ஒரு வேற்றுகிரக வாசி. பூமிக்கு தன் சகாக்களோடு வந்த ஈமோ தன் விண்கலத்தை தவற விட்டுவிட்டது. அவர்கள் திரும்பி வரும் வரையில் பூமியில் தான் இருந்தாக வேண்டும். அதுவரை முகிலன் எனும் சிறுவனை நண்பனாக்கி கொள்கிறது. ஈமோவின் சிறப்பு என்னவென்றால் அதனால் எந்த ஒரு பொருளாகவும் தன் உடலை மாற்றிக்கொள்ள முடியும்.

முகிலனுடன் நாட்களை கடத்தும் போது நமது பழக்கங்களில் உள்ள மூடநம்பிக்கைகளையும் அர்த்தமற்ற சடங்குகளையும் பார்த்து வியக்கிறது. கேள்வி கேட்கிறது. என்ன, PK இந்தி பட கதை போலவே உள்ளதா? எனக்கும் அப்படித்தான் உள்ளது.

கதை - மாக்சிம், ஓவியங்கள் - கி. சொ.






கதையோட்டம் பிரச்சார தொனியில் இல்லாமல், சிறுவர்களை குழப்பாமல் அமைக்கப்பட்டுள்ளது. ஓவிங்களிலும் சரி, கதை அமைப்பிலும் சரி இது ஒரு தரமான படைப்பாகவே உள்ளது. குறிப்பாக தமிழின் ஏனைய தினசரிகளில் வெளிவரும் daily strip படைப்புகளை ஒப்புகையில் இது கண்டிப்பாக ஒரு சிறந்த படைப்புத்தான்.

இந்த சித்திரக்கதை தொடர் விடுதலை இணைய பக்கத்தில் படிக்க கிடைக்கிறது.   http://viduthalaidaily.blogspot.in/2014/11/blog-post_12.html   பதிவை வாசித்துவிட்டு கருத்துகளை பகிர்ந்திடுங்கள் நண்பர்களே.

1 comment:

HAJA ISMAIL said...

.நானும் படித்தேன் ... மிக அருமையான படைப்பு. படம் நன்றாக வரையப்ட்டுள்ளது
ஓவியர் - கி. சொ.அவர்களை பற்றி தெரிவிக்கவும்
அன்புடன்
ஹாஜா இஸ்மாயில்